உலகில் இறுதியாக எஞ்சியுள்ள ஒரேயொரு வெள்ளை ஆண் காண்டாமிருகத்துக்கு ஆயுத பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கென்யாவின் வனவிலங்குப் பூங்காவொன்றிலுள்ள இந்த காண்டா மிருகம் அரிய வகை வெள்ளை காண்டா மிருக இனத்தைச் சேர்ந்தது.
தற்போது உலகிலுள்ள ஒரேயொரு வெள்ளை ஆண் காண்டா மிருகம் இதுவாகும்.
“சூடான்” என பெயரிடப்பட்டுள்ள இக்காண்டா மிருகத்தை யாரும் கொல்வதையோ கடத்திச் செல்வதையோ தடுப்பதற்காக ஆயுதம் ஏந்திய காவலர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரவும் பகலும் காண்டா மிருகத்துக்கு அருகில் காவலில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ரேடியோ டரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்டு, இக்காண்டா மிருகத்தின் ஒவ்வொரு நகர்வும் அதிகாரிகளால் அவதானிக்கப்படுகிறது.
இந்த ஆண் காண்டா மிருகத்துடன் வெள்ளை பெண் காண்டா மிருகங்கள் இரண்டும் வசிக்கின்றன.
இவை தவிர வேறு இரு வெள்ளைக் காண்டா மிருகங்களும் உள்ளன. ஆனால் அவற்றை மேற்படி ஆண் காண்டா மிருகத்துடன் இணைந்து கருத்தரிக்கச் செய்யும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது
No comments
Post a Comment