Latest News

April 03, 2015

Samsung Galaxy S6 மற்றும் S6 edge!
by Unknown - 0


Samsung நிறுவனம் அனைவராலும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S6 ஸ்மார்ட்போனை வருகின்ற ஏப்ரல் 10 ஆம் திகதி 20 நாடுகளில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த Samsung Galaxy S6 ஸ்மார்ட்போன் iPhone 6 மற்றும் HTC One M9 போன்ற போன்களை அதிகமாக விரும்புவர்களை கூட கவரும் வண்ணம் வடிமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற Samsung போன்களை போல் இல்லாமல் முற்றிலும் இது வித்தியாசமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Galaxy S6 and S6 edge என இரு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இது பயனாளர்களுக்கு சிறந்த ஒரு அனுபவத்தை கொடுக்கும் என XDA Developers தெரிவித்துள்ளனர். அப்படி என்ன இருக்கிறது இதில்,

டிஸ்பிளே (Diplay)

Galaxy S6 டிஸ்பிளேவை (Diplay) பொருத்த வரை 5.1 இன்ச் (inch) அகலம் மற்றும் Super AMOLED capacitive touchscreen கொடுக்கப்பட்டுள்ளது. அதி நவீன வடிவமைப்பு, கிளாஸ் பாடி (Glass body) மற்றும் மெட்டல் ப்ரேம் (Metal Frame) கொண்டுள்ளது.

ரெசல்யூஷன் (Resolution) 1440 x 2560 pixels, Corning Gorilla Glass 4 back panel உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் (OS)

Galaxy S6 ஆண்டிராய்டு 5.0 லாலிபாப் (android lollipop) கொண்டு இயங்குவதோடு Exynos 7420 சிப்செட்டை (Chipset) கொண்டிருக்கின்றது.

மேலும் Quad-core 1.5 GHz Cortex-A53 & Quad- core 2.1 GHz Cortex-A57 உடன் அட்டகாசமாக உள்ளது. Galaxy S6 edge-யும் ஆண்டிராய்டு 5.0 லாலிபாப் மென்பொருள் கொண்டு இயங்குகிறது.

ஸ்டோரேஜ் (Storage)

Galaxy S6 ஸ்மார்ட்போனில் 32, 64 மற்றும் 128 ஜிபி வரை மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிராசஸரை (Processor) பொருத்தவரை புதிய 14 நானோமீட்டர் பிராசஸர், 64 பிட் சிப்செட் மற்றும் 3ஜிபி ரேம் (Ram) கொண்டிருக்கின்றது.

கமெரா (Camera)

Galaxy S6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி பின்பக்க கமெரா மற்றும் 5 எம்பி முன்பக்க கமெரா இருப்பதோடு குறைந்த வெளிச்சத்தில் துள்ளியமான புகைப்படங்களை எடுக்கும் லென்ஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு ஆட்டோ ரியல் ஹெச்டிஆர் (HDR) அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடிவமைப்பு (Design)

Galaxy S6 143.4 x 70.5 x 6.8 mm உடன் 138 கிராம் எடையும், Galaxy S6 edge 142.1 x 70.1 x 7 mm உடன் 132 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இத்துடன் Nano SIM பயன்படுத்தும் வசதியும், Finger print sensor வசதியும், Samsung Pay மூலம் பணம் செலுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதம் வசதிகளாகும்.

பேட்டரி (Battery)

Galaxy S6 பேட்டரி 2550 mAh மற்றும் Galaxy S6 edge பேட்டரி 2600 mAh கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. கழற்ற முடியாத படி அமைக்கப்பட்டுள்ள இதனால் நீண்ட நேரம் ஸ்மார்போனை பயன்படுத்த முடியும்.

மேலும் Fast Charging, Wireless Charging கொடுக்கப்பட்டுள்ளது. 10 நிமிடம் Charge செய்தால் 4 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி (Connectivity)

வைபை (Wi-fi), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 4.0 (Bluetooth), Infrared, 3.5எம்எம் ஆடியோ ஜாக், 3G மற்றும் பல புதிய சென்சார்கள் (Sensor) வழங்கப்பட்டுள்ளது.

Galaxy S6 விலை ரூ.49.900 ஆகவும், Galaxy S6 edge விலை ரூ.58,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

White Pearl, Black Sapphire, Gold Platinum, Blue Topaz என பல வண்ணங்களில் வரும் இந்த ஸ்மார்போன்களின் விற்பனைக்கான முன்பதிவு இப்போதே தொடங்கிவிட்டது.

முன்பதிவு கட்டணமாக ரூ. 2000 செலுத்தினால் போதும்.. அப்போ நீங்களும் வாங்க தயாராகிட்டீங்களா.


« PREV
NEXT »