Latest News

April 14, 2015

எந்திரன் 2! அறிவிப்பு விரைவில் வருமா?
by admin - 0

கோச்சடையான், லிங்கா என தொடர்ந்து இரு படங்களிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ரஜினி படங்கள் பூர்த்தி செய்யவில்லை. அடுத்த படத்தில் கண்டிப்பாக ஹிட் கொடுத்தே தீரவேண்டும் என்ற முடிவில் ரஜினி - ஷங்கர் ஜூட்டணி மீண்டும் இணைவதாக திரையுலகில் செய்திகள் உலவிவந்தன.
எந்திரன் 2
எந்திரன் 2

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் அடுத்த பாகமாக எந்திரன் 2 உருவாகப்போவதாகவும், எந்திரன் படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள் அனைவரும் எந்திரன் 2-ல் பணிபுரிவதாகவும் வெளிவந்த தகவல்களில் உண்மையில்லை என்ற தகவல் தற்போது பரவி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

ரஜினி தரப்பில் ’இந்த தகவல்களில் உண்மையில்லை. டாட்’ என கூறப்படுகிறது.  ஆனால் வேறு எந்த தயாரிப்பு நிறுவனத்துடனும் ரஜினி தரப்பு பேச்சுவார்த்தையில் இல்லை என்பதால் கூடிய விரைவில் எந்திரன் 2 பற்றிய செய்திகள் தெரிவிக்கப்படும் என்றும் பேசப்படுகிறது. வதந்திகள் வருவது இயல்பு தான். ஆனால் அந்த வதந்திகளை ஒழித்துக்கட்ட இரு தரப்பிலிருந்தும் ஒரு அறிக்கை வரவேண்டுமே. அந்த அறிக்கைக்காகத் தான் காத்துக்கிடக்கிறது கோடம்பாக்கமும், ரசிகர் பட்டாளமும். 
« PREV
NEXT »

No comments