Latest News

April 10, 2015

யாழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் பொலிஸார்!
by Unknown - 0



கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நல்லூர் பிரதேசத்தில் வைத்து சிவில் உடை அணிந்த இரண்டு பேர் அடங்கிய குழுவினர் மூன்று ஊடகவியலாளர்களை, கத்தியுடன் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தியுள்ளார்கள்.

குறித்த ஊடகவியலாளர்கள் உண்ணாவிரத செய்தி சேகரிப்புக்கு சென்று தங்கள் அலுவலகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு துரத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது இடம்பெறவிருந்த தாக்குதலில் இருந்து தப்பி யாழ் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக விரைந்து சென்றுள்ளனர் அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது பொலிஸ் நிலைய வளாகத்தில் ஊடகவியலாளர்களை தாக்கிய குழுவினரின் முச்சக்கர வண்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்ததோடு பொலிஸ் அதிகாரி மற்றும் சார்ஜனே தாக்குதல்காரர்கள் என அவர்களுக்கு தெரியவந்தது.

பொலிஸ் நிலையத்தில் கடமை நேரத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் புகார்களை ஏற்க மறுத்துள்ளனர்.

இதேவேளை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரிகின்ற ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பள்ளி மாணவியை கற்பழிப்பு செய்ய முயற்சி செய்ததாக செய்தி எழுதியதனால் பருத்தித்துறையில் மற்றமொரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் தினக்குரல் பத்திரிகையின் நிருபர் தர்மபாலன் வினோஜித் மற்றும் யாழ் ஊடக ஒன்றியத்தின் தலைவர், பிரதீபன் தம்பிதுரை மற்றும் ஹிரு தொலைகாட்சியின் யாழ் நிருபர் மயூரதன் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோரே கடந்த செவ்வாய்கிழமை அன்று இரண்டு குழு அடங்கிய குழுவினரால் துரத்தப்பட்டுள்ளனர்.

கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் குறித்த பத்திரிகையாளர்களை தாக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இவர்கள் தப்பிவிட்டார்கள்.

தாக்குதல்தாரிகள் பொலிஸார் அணியும் சிவில் உடை அணிந்திருந்ததாகவும். அதில் ஒருவர் முகக்கவசம் அணிந்திருந்ததாக குறித்த பத்திரிகையாளார்கள் தெரிவித்துள்ளார்கள்.

அப்பத்திரிகையாளர்கள் ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் அதே பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவரே தாக்குதல்தாரியென அறிந்துள்ளனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவர்களின் புகாரை ஏற்க மறுத்துள்ளதோடு தாக்கவும் முயற்சித்ததாக ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நீண்ட வாக்குவாதங்களுக்கு பின்னர் அடுத்த நாளில் அப்புகாரை பொலிஸார் ஏற்றுக்கொண்டதுடன் அதிலும் ஒரு சில குற்றங்களையே பதிவு செய்தனர் என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குற்றம் சாட்டப்பட்ட பொலிஸாருக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்பதற்காக ஊடகவியலாளர்களுடன் புதன்கிழமை இரவு ஒரு பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளதாகவும் யாழ் ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறுதியாக இத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் இரு பொலிஸ்காரர்கள் இருந்துள்ளனர் என பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் பொலிஸார் கத்தியை, தங்கள் பாதுகாப்பிற்காகவே வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை மூன்று ஊடகவியலாளர்களும், பொலிஸாரை தாக்க முயற்சித்ததாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2 கிலோ மீட்டர் தூரம் தாக்குதல்காரர்கள் அவர்களை துரத்தி வந்து கத்தியால் தாக்க முயற்சித்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பயிற்சி பொலிஸ் அதிகாரிகள் ஆயுதங்களாக கத்திகளை எவ்வாறு உபயோகிக்க முடியும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை பொலிஸார், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி) மற்றும் இலங்கையில் இராணுவ புலனாய்வினரால் ஊடகவியலாளர்களை தொடர்ந்து கைது செய்யவதாக யாழ் அச்சக நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு, உயர் பாதுகாப்பு வலயங்கள் அழித்துவரும் செய்தியினை வெளியே கொண்டு வந்ததற்காக ஊடகவியலாளர் மயூரதன் மற்றும் வினோஜித் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து அவர்களை கைது செய்வதாக யாழ் ஊடக ஒன்றிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் குறித்த பொலிஸ் குழுவிற்கு எதிரான வழக்கை கைவிடவிரும்பவில்லை, வியாழக்கிழமை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு இவர்களை அணுகியுள்ளது.

நாம் இன்னும் பத்திரிகையாளர் நிமலராஜனை பொலிஸார் கைது செய்து தொந்தரவு செய்து படுகொலை செய்திருப்பதை மறந்திருக்க மாட்டோம் என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உதயன் மற்றும் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்யும் லோக தயாளன் என்ற பத்திரிகையாளர் நெல்லியடி பொலிஸ்காரர் ஒருவரின் கற்பழிப்பு முயற்சி தொடர்பான செய்தி வெளியிட்டதற்காக வியாழக்கிழமையன்று விசாரணை மேற்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்செய்தி செவ்வாய்கிழமை உதயன் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. ஆனால் குறித்த பொலிஸ் அதிகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இலங்கை பொலிஸார் பத்திரிகை ஆசிரியர் டி.பிரேமாநாதன் மற்றும் நிருபர் லோகதயாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்ய விரும்பினார்கள். ஆனால் லோகநாதனிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் அறிக்கையினை நீதி மன்றத்தில் சமர்பித்த பின்னர் கடந்த புதன்கிழமையன்று அவர் கைது செய்யப்பட்டார்.

பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் பீ.சுப்ரமணியம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை பத்திரிகையாளரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் வியாழக்கிழமையன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். . ஊடகவியலாளர் சட்டபூர்வமாக இதழியலின் விதிமுறைகளை மீறவில்லை எனினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என யாழ் ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
« PREV
NEXT »