Latest News

April 08, 2015

ஊடகவியலாளர்களை கொல்ல முயன்ற சிங்கள காவற்துறை-சாட்சியம்
by admin - 0

நல்லூர் முன்றலில் தூய நீருக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுடன் வடமாகாண அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வந்து பேச்சு நடாத்தி கொண்டு இருப்பதாக எமக்கு நேற்று இரவு 9 மணியளவில் தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து நானும் ஹிரு தொலைகாட்சி யாழ்.பிராந்திய ஊடகவியலாளர் த.பிரதீபன் மற்றும் யாழ்.தினக்குரல் ஊடகவியலாளர் த.விநோஜித்தும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று இருந்தோம்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்களுடன் வடமாகாண மீன் பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுக்களை நடாத்திக்கொண்டு இருந்தார்கள்.

அது தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட பின்னர் தான் தினக்குரல் அலுவலகத்திற்கு சென்று செய்தியினை வழங்க வேண்டும் எனவே யாழ்.நகருக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவோம் என விநோஜித் கோரியதனால் நாம் மூவரும் பருத்தித்துறை வீதி வழியாக யாழ்.நகர் நோக்கி சென்றோம்.

அவ் வேளை (இரவு 9.45மணி ) நல்லூர் தெற்கு வாசல் கோபுரத்திற்கு முன்பாக நாம் மூவரும் இரு மோட்டார் சைக்கிளில் சென்ற கொண்டிருந்த போது NP BAL 2172 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் வந்த இருவர் ( மோட்டார் சைக்கிள் ஓடியவர் தலைகவசம் அணியவில்லை பின்னால் இருந்தவர் தலைக்கவசம் அணிந்து இருந்தார்) எமது மோட்டார் சைக்கிளுக்கு மிக அருகாக தமது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றனர்.

பின்னர் தமது மோட்டார் சைக்கிளை மெதுவாக செலுத்தி எம்மை முந்த வைத்தார்கள் நாம் அவர்களை முந்தி சென்ற வேளை லிங்கம் கிறீம் ஹவுஸ்க்கு முன்னால் மீண்டும் எம்மை முந்தி எமது மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிளை விட்டு எம்மை மறித்தார்கள்.

நீங்கள் யார் ? என கேட்டவாறு நாம் எமது மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் ஓடி வந்த தலைகவசம் அணியாதவர் தான் பொலிஸ் இன்பெக்ஸ்டர் என கூறினார். அவ்வேளை நாம் அவரை பார்த்த போது அவர் பொலிசார் அணியும் நீல நிற T சேட் அணிந்து இருந்தார்.

அதற்கு ? என நாம் கேட்க மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வெள்ளை T சேட்டும் வெள்ளை நிற கட்டை காற்சட்டை அணிந்த ஒருவர் மொனவாத ? (என்ன ?) என சிங்களத்தில் கேட்டவாறு இறங்கி தனது காற்சட்டை பொக்கெட் க்குள் இருந்து மடித்து வைக்க கூடிய வாறான சிறிய ரக (கிரீஸ்) கத்தி ஒன்றினை எடுத்துக்கொண்டு எம்மை நோக்கி வந்தார்.

உடனே சுதாகரித்துக்கொண்ட நாம் எமது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ்.நகர் நோக்கி பருத்தித்துறை வீதி வழியாக ஓடினோம். அவர்களும் எம்மை பின் தொடர்ந்து துரத்தினார்கள்.

மிக வேகாமாக பருத்தித்துறை வீதி வழியாக துரத்தி வந்தார்கள். பின்னால் இருந்தவர் கத்தியினை கையிலையே வைத்து இருந்தார்.

வேம்படி சந்தியை அண்மித்ததும் அவர்கள் தமது மோட்டார் சைக்கிளை மெதுவாக செலுத்திக்கொண்டு எம்மை பின் தொடர்ந்தார்கள்.

நாம் யாழ்.பொலிஸ் நிலையத்தை சென்றடைந்து ,
பொலிஸ் நிலையத்திற்குள் செல்லும் போது எம்மை பின் தொடர்ந்து வந்தவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கு சீருடையில் நின்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரிடம் கத்தியை கையளித்து விட்டு அவர்கள் அலுவலகத்திற்குள் சென்று உட்கார்ந்து இருந்தார்கள்.

நாம் நேராக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பால சூரியாவிடம் சென்று சம்பவம் தொடர்பில் முறையிட்டதுடன், எம்மை துரத்தி வந்தவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தான் இருக்கின்றார்கள் என கூறினோம்

அதற்கு உடனே அவர் அருகில் நின்ற 32235 எனும் இலக்கமுடைய பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகஸ்தர் ஒருவரை என்னுடன் அனுப்பி பார்த்து வருமாறு கூறினார்.

நான் அந்த பொலிஸ் உத்தியோகஸ்தருடன் அவர்களை அடையாளம் காட்டும் பொருட்டு சென்ற போது அவர்கள் இருவரும் அந்த அலுவலகத்தில் இருந்தார்கள்.

என்னை கண்டதும் அவர்கள் இருவரும் வெளியில் வந்தார்கள் அதில் நில நிற T சேட்டுடன் நின்றவர் சிங்களத்தில் தூசண வார்த்தைகளால் பேசியவாறு என்னை தாக்கும் நோக்குடன் கைகளை ஓங்கியவாறு என்னை நோக்கி வந்தார்.

உடனே என்னை அழைத்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வாங்க தம்பி என என்னை பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்றார். அவர்கள் இருவரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகாக சென்று அலுவகத்திற்கு பின்புறமாக சென்று விட்டார்கள்.

பின்னர் எம்மை சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோரினார். அதன் அடிப்படையில் முறைப்பாட்டை பதிவு செய்தோம்.

அதில் பிரதான முறைப்பாட்டாளராக ஒருவரே முறைப்பாட்டை பதிவு செய்யலாம் எனவும் ஏனைய இருவரும் சாட்சியமாக பதிவு செய்யுங்கள் என முறைப்பாட்டை பதிவு செய்ய இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கோரினார்.

அதனடிப்படையில் ஒருவர் பிரதான முறைப்பாட்டாளராகவும் மற்றைய இருவரும் சாட்சியமாக பதிவு செய்ய சம்மதித்தோம்.

பிரதான முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டினையும் சாட்சியம் ஒன்றினையும் பதிவு செய்து முடிய நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியது.

மணி நள்ளிரவு 12 ஆகிவிட்டதனால் மற்றைய சாட்சியத்தை காலை 8 மணிக்கு வந்து பதியுமாறு முறைப்பாட்டை எழுதிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து நாம் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். நாம் வெளியே வந்த போதில் எம்மை துரத்திகொண்டு வந்தவர்களின் மோட்டார் சைக்கிள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாகவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அடுத்து சாட்சியம் அளிக்க உள்ளவர் நான் தான் ...

« PREV
NEXT »

No comments