யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுயாதீனச் செய்தியாளர் ந.லோகதயாளன் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் இன்று பிற்பகல் விளக்கமறியலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
காலை 10 மணிக்கு நெல்லியடிப் பொலிஸாரால் விசாரணைக்கு என அழைக்கப்பட்டிருந்த அவர், பிற்பகல் 2 மணியவில் பருத்தித்துறை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பாகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
பாடசாலை மாணவி ஒருவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டார் என முறையிடப்பட்டதாகக் கூறப்படும் செய்தி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸார் நீதிமன்றத்தில் "ஏ' அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். எனினும் எந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.
No comments
Post a Comment