Latest News

April 10, 2015

உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by admin - 0


விவசாயி,தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள்,யாழ்ப்பாண  செய்திகள்,இந்திய செய்திகள்,கவிதைகள்,விடுப்பு,பல்கலைக்கழகம்,விடுதலை,கடல்,தரை,இலங்கை,வவுனியா,கிளிநொச்சி,மன்னார்,மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை,முல்லைதீவு,TGTE, Transnational Government of Tamil Eelam
news
உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களும் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள்.

நல்லூர் கோவில் முன்றலில் கடந்த 7ம் திகதி தூய நீருக்காக உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

அது தொடர்பான செய்தியினை சேகரித்து விட்டு அன்றைய தினம் இரவு பருத்தித்துறை வீதி வழியாக யாழ்.நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஹிரு தொலைகாட்சியின் பிராந்திய ஊடகவியலாளர்  த.பிரதீபன் , யாழ்.தினக்குரல் ஊடகவியலாளர் த.வினோஜித், மற்றும் சுயாதின ஊடகவியலாளர் ஸ்ரீ.மயூதரன் ஆகிய மூன்று ஊடகவியலாளர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இடைமறித்து கத்தியினை காட்டி மிரட்டி யுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து யாழ்.நகர் நோக்கி ஓடிய ஊடகவியலாளர்களை சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸ் நிலையம் வரை துரத்தியும் சென்றுள்ளனர்.

அச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் 7 ம் திகதி இரவே யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அது தொடர்பில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திலும் ஊடகவியலாளர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

தமது உயிருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், சம்பவம் தொடர்பான நியாயமான விசாரணை நடாத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், சம்பவம் தொடர்பிலான காரணமும் அதன் பின்னணியும் கண்டறியப்படவேண்டும் என கோரிக்கையும் தமது முறைப்பாட்டில் முன்வைத்துள்ளார்கள்.

அத்துடன் அன்றைய தினம் பொலிசார் தமது முறைப்பாட்டை சிறு குற்ற பிரிவின் கீழே ஏற்றுக்கொண்டதாகவே ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தமக்கு கத்தியை காட்டி மிரட்டியமை, தம்மை கொலை செய்யும் நோக்குடன் மூன்று கிலோமீற்றர் தூரம் துரத்தி சென்றமை என்பன கிரிமினல் குற்றம் எனவும், தம்மை துரத்தி வந்தவர்களின் மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையம் முன்பாக அன்றைய தினம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போதிலும் அதனை பொலிசார் கைப்பற்றவில்லை எனவும் தெரிவித்தார்கள்

அதேவேளை 7 ம் திகதி இரவு தம்மை துரத்தி வந்தவர்களின் NP BAL 2172 எனும் இலக்கமுடைய மோட்டார்  சைக்கிளை இன்றைய தினம் சீருடை அணிந்த பொலிசார் யாழ்.நகர் பகுதியில் ஓட்டி சென்றதனை தாம் கண்ணுற்றதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
« PREV
NEXT »