![]() |
CPJ |
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. என்;. லோகநாதன் என்ற சுதந்திர ஊடகவியலாளர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மாணவி ஒருவரை காவல்துறையினர் தாக்கியதாக யாழ்ப்பாண பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தொடர்பில், லோகநாதனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்திருந்தனர். இந்த தகவல்களில் உண்மையில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், பத்திரிகையில் வெளியான தகவல் சரியானதே என பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட முடியாத நிலைமை தொடர்வதாக சீ.பி.ஜே தெரிவித்துள்ளது.
Social Buttons