![]() |
பஷில் |
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பஷில் ராஜபக் ஷஎம்.பி. எதிர்வரும் 20 ஆம் திகதியளவில் இலங்கைக்கு வருகைதருவார் என்று அவரின் சட்டத்தரணி அண்மையில் கடுவலை நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பஷில் ராஜபக்ஷ இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
அதன் பின்னர் பஷில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் மூன்று மாதங்கள் விடுமுறை வழங்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா கோரியிருந்தார்.
No comments
Post a Comment