இலங்கை இராணுவத்தினால் பரந்தனில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனது காணிகளை விடுவிக்க கோரி மூதாட்டியொருவர் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான திருமதி. இந்திரா யோகேந்திரன் எனும் 60வயதான மூதாட்டியே தனது காணியை தன்னிடம் இராணுவத்தினர் ஒப்படைக்க மறுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பரந்தனிலுள்ள தனது காணியில் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைஇராணுவத்தினரின் படை முகாம் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் என்பவை செயற்பட்டுவரும் காணியை விடுவிக்க கோரியே அவர் போராட்டத்தினில் குதித்துள்ளார். 2008ம் ஆண்டின் இறுதியினில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அவரது காணி இன்றுவரை இராணுவமுகாமாகவே உள்ளது.
No comments
Post a Comment