Latest News

April 19, 2015

நோக்கியா ஸ்பெஷல் - நோக்கியா பற்றி உங்களுக்கு தெரியாதது
by admin - 0

நோக்கியா நிறுவனம் மொபைல் போன் சந்தையில் உலக பிரபலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இங்கு நோக்கியா நிறுவனம் குறித்து பலரும் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

ரிங்டோன் ring tone
பிரபல நோக்கியா ரிங்டோன் 19 ஆம் நூற்றாண்டின் கிட்டார் கருவியின் மூலம் இசைக்கப்பட்டது, அதன் உண்மை ட்யூன் "Grande Valse" என்று அழைக்கப்பட்டது.

ஜிஎஸ்எம் gsm
உலகின் முதல் ஜிஎஸ்எம் கால் 1991 ஆம் ஆண்டு நோக்கியாவின் நெட்வர்க் மூலம் மேற்கொள்ளப்பட்டது. நோக்கியா போன் மூலம் ஃபின்லாந்து நாட்டின் பிரதமர் ஹேரி ஹோல்கெரி இதை செய்தார்.

கேமரா camera

தற்சமயம் உலகின் பெரிய டிஜிட்டல் கேமரா தயாரிப்பு நிறுவனமாக நோக்கியா இருக்கின்றது.

டோன்
நோக்கியா போன்களில் வரும் குறுந்தகவல் டோன்களில் மோர்ஸ் கோடு இருக்கின்றது, குறிப்பாக "Ascending" எஸ்எம்எஸ் டோன் "Connecting People," என்ற வார்த்தைக்கு அர்த்தமாகின்றது, இது தான் நோக்கியாவின் ஸ்லோகன் ஆகும். "Standard" எஸ்எம்எஸ் டோன் "M" என்ற வார்த்தையை குறிக்கும் மோர்ஸ் கோடு ஆகும்.

ஆசியா
ஆசியாவில் எந்த நோக்கியாவின் கருவியில் 4 எண் இருக்காது, ஏனெனில் இந்த எண் தென் கிழக்கு மற்றும் கிழக்காசிய பகுதிகளில் ராசி இல்லாத எண்'ஆக கருதப்படுகின்றது.
நிறுவனம் 

2006 ஆம் ஆண்டு பார்ச்சூன்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி உலகளவில் 20 கவர்ச்சிகர நிறுவனங்களின் பட்டியலில் நெட்வர்க் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் முதலிடத்தையும், அமெரிக்கா இல்லாத நிறுவனங்களில் நான்காம் இடத்தையும் நோக்கியா நிறுவனம் பிடித்தது.

பெயர்
நோக்கியா நிறுவனத்தின் பெயர் அந்நிறுவனம் துவங்கப்பட்ட இடத்தில் இருந்த ஆற்றின் பெயரை தழுவி சூட்டப்பட்டது, அந்த ஆற்றின் பெயர் Nokianvirta, நோக்கியாவிர்டா


« PREV
NEXT »

No comments