Latest News

April 23, 2015

ஜோதிடரை நம்பி ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்காக கவலையடைகின்றேன்
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya
ஜோதி­டரின் பேச்சைக் கேட்டு முன்னதா­கவே ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தி­ய­மையையிட்டு தற்­போது கவ­லை­ய­டை­கின்றேன். தற்­போது நான் ஜோதி­டர்­களை நம்­பு­வ­தில்லை என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

புதிய அர­சாங்­கத்தின் கீழ் அர­சியல் ஸ்திர­மின்மை காணப்­ப­டு­கின்­றது. எனவே நாட்டில் ஸ்திரத்­தன்­மையை உறு­தி­செய்­வ­தற்­காக விரைவில் பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெற­வேண்டும் எனவும்
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குறிப்­பிட்­டுள்ளார். ஏ.எப்.பி. செய்­திச்­சே­வைக்கு வழங்கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

அந்த செவ்­வியில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;
அர­சாங்கம் எனது குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரான அர­சியல் பழி­வாங்­கல்­களில் ஈடு­பட்­டுள்­ளது. எனது ஆட்சி ஊழல் நிறைந்­தது என சித்­த­ரிக்க முற்­ப­டு­வதன் மூல­மாக என்னை மைத்­தி­ரி­பால சிறி­சேன அச்­சு­றுத்த முயல்­கின்றார்.
அவர்­க­ளிடம் ஆதா­ரங்கள் இல்லை. அவர்கள் கண்­மூ­டித்­த­ன­மான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். இது அர­சியல் பழி­வாங்கல் நட­வ­டிக்­கை­யாகும். நானோ அல்­லது எனது குடும்­பத்தை சேர்ந்­த­வர்­களோ தவ­றான வழியில் பணம் சேர்க்­க­வில்லை.

ஹோட்­டல்கள் உள்­ளதா?
முதலில் என்­னிடம் சுவிஸ் வங்­கிக்­க­ணக்­குகள் உள்­ள­தாக தெரி­வித்­தனர். பின்னர் துபாயில் இருப்­ப­தாக தெரி­வித்­தனர். அந்த பணத்தை காண்­பி­யுங்கள் ஆதா­ரங்கள் எங்கே என்று கேட்­கின்றேன்.
துபாயில் எனக்கு ஹோட்­ட­லொன்று இருப்­ப­தாக தெரி­வித்­தனர். அதன் பின்னர் இலங்­கையில் உள்ள அனைத்து ஹோட்­டல்­களும் எனக்கும் எனது சகோ­த­ரர்­க­ளுக்கும் சொந்­த­மா­னவை என குறிப்­பிட்­டனர். இது ஓரு நகைச்­சு­வை­யாகும்.

சீன விவ­காரம்

நான் ஒரு­போதும் சீனா­விற்கு சார்­பாக செயற்­பட்­ட­தில்லை, இலங்­கையின் நலன்­களை மனதில் வைத்தே செயற்­பட்டேன். அனைத்து பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளையும் முதலில் இந்­தி­யா­விற்கே வழங்­கினேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்­க­வில்லை.

ஜோதி­டர்­களில் நம்­பிக்கை இழந்தேன்

குறிப்­பிட்ட காலத்­திற்கு முன்னர் தேர்தல் நடத்­தி­யது பாரிய தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஜனா­தி­பதி தேர்­தலை இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே நடத்­தி­யது மிகப்­பெரும் தவ­றாகும். இதற்­காக நான் தற்­போது வருத்­த­ம­டை­கிறேன். குறிப்­பிட்ட திக­தியில் தேர்தல் நடத்­தினால் எனக்கு வெற்றி நிச்­சயம் என ஜோதிடர் தெரி­வித்தார். நான் சகல ஜோதி­டர்­க­ளிலும் தற்­போது நம்­பிக்­கையை இழந்­து­விட்டேன்.

ஓய்­வு­பெ­ற­வில்லை

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன். புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது. ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டும்.
« PREV
NEXT »

No comments