Latest News

April 11, 2015

மீண்டும் அவதாரமெடுக்கும் மகிந்த
by admin - 0


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல் ரீதியாக மீண்டும் பலமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்து அச்செய்தி நிறுவனம் விசேட செய்தி வெளியிடும் போதே குறித்த செய்தி வெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் குறித்து மக்களின் பாராட்டு குறைவடைந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய தீர்மானங்கள் குறித்து அரசாங்கத்திடம் தெளிவான நிலைப்பாடு இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

400 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பத்திரங்கள் விநியோகம் தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்தில் அதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதனால் அரசாங்கம் தோல்வியடைந்ததற்கான உதாரணமாகிவிட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் நடாத்தப்படுகின்ற மக்கள் பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவமேற்றிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொள்வதனையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.

« PREV
NEXT »

No comments