பிரித்தாணியாவில் வரவுள்ள பொதுத்தேர்தலில் நாடு கடந்த அரசின் முக்கிய உறுப்பினர் , யோகி அவர்கள் ஹரோவில் போட்டியிடுகிறார். ஹரோ வெஸ்டில்(Harrow West), உமா குமாரன் என்னும் ஈழத் தமிழச்சி லேபர் கட்சியின் ஆதரவோடு போட்டியிடுகிறார். ஆனால் இவர்கள் பற்றிய செய்திகளை மறைத்து சமலி பெர்னாண்டோ என்னும் சிங்கள பெண் போட்டியிடுவதாகவும் , இவர் மூத்த அரசியல்வாதி என்றும் சில இணையங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த சமலி பெர்னாண்டோ என்பவர் ஒரு சிங்களவர் ஆனால் தமிழ் இணையங்கள் அவருக்கு வாக்காலத்து வேண்டி செய்தி பிரசுரிப்பதன் மர்மம் என்ன?
நாடுகடந்த அரசின் பாரளுமன்ற உறுப்பினர் யோகி தற்பொழுது NLP கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் அவர் ஒரு தமிழ் தேசியவாதி மற்றும் லேபர் கட்சியில் போட்டியிடும் உமா குமாரன்
இலங்கையில் நடந்த கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதனை ஏற்றுக்கொண்டவர் , மற்றும் அதனை செயல்படுத்தவேண்டும் என்று கூறிவருபவர் உமா குமாரன்.அவர் பற்றிய செய்திகளை இந்த இணையங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளார்கள்,
தமிழ் மக்களுக்கும் , தமிழர் போராட்டங்களுக்கும் உறுதுணையாக நிற்கும் நபர்களை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். சிங்களவர்களுக்கு எமது வாக்கை அள்ளிக்கொடுக்க இவர்கள் சொன்னால் எப்படி ? நாளை இந்த சிங்களப் பெண் பாராளுமன்றில் சிங்கள அரசுக்கு சார்பாக பேசுவார். அப்போது என்ன செய்ய முடியும் ? சற்றே யோசித்து செயல்படுங்கள் தமிழர்களே !
பிரித்தானியா வாழ் தமிழா தமிழனை வெற்றி பெறவைப்போம்
No comments
Post a Comment