லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் , எதிர்கட்சியான லேபர் கட்சி சார்பில் உமா குமாரன் என்னும் ஈழத் தமிழ் பெண் களமிறக்கப்பட்டுள்ளார். இளவயதான உமா அவர்கள் , லண்டன் ஹரோ கிழக்கு(HARROW EAST) பகுதியில் பாராளுமன்ற வேட்ப்பாளராக போட்டியிட உள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹரோ கிழக்கில் , லேபர் கட்சி வெறும் 3,000 வாக்குகளால் தான் தோற்றுப்போனது.
ஆனால் இம்முறை போட்டியிடும் உமா ஈழத் தமிழர் என்பதனால் அவருக்கு அதிகபடியான வாக்குகள் விழும் என்று எதிர்பார்கப்படுகிறது. மே மாதம் நடக்கவுள்ள தேர்தலில் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் லேபர் கட்சியே வென்று ஆட்சியமைக்கும் என்று லண்டனில் நடந்த கருத்து கணிப்புகள் தற்போது தெரிவிக்கின்றன.
ஹாரோவில் மட்டும் சுமார் 5,000 ஈழத் தமிழர்கள் செறிவாக வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரது வாக்குகளும் உமா குமாரணுக்கு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் நாம் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் வென்று , தமிழர் ஒருவரை முதன் முறையாக பிரித்தானிய பாராளுமன்றம் அனுப்ப முடியும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.