Latest News

April 23, 2015

ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு குழுவினர் மைத்திரிபால சிறிசேனவின் வாசஸ்தலத்தை நோக்கி, ஒரு குழுவினர் வெலிக்கடை சிறைச்சாலை முன், கோத்தா பஷிலை பார்க்க..
by admin - 0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு குழுவினர் கொழும்பு-7 விஜயராம மாவத்தையிலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கும் அதேவேளை,

ஒரு குழுவினர், வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கியும் பேரணியாக சென்றுகொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒரு பிரிவினரே வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி பேரணியாக செல்கின்றனர். வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தே இவர்கள் பேரணியாக செல்கின்றனர். அதேவேளை,

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கோத்தபாய ராஜபக்ஷ பார்வையிடச்சென்றுள்ளார்.

« PREV
NEXT »

No comments