வீட்டைவிட்டு வெளியேறி தனிமையில் வசித்து வந்த காதலர்களை தேடி வந்த கும்பல் ஒன்று காதலனை தாக்கிவிட்டு, காதலியை கடத்திச் சென்றுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10ம் வட்டாரம் புங்குடுதீவு பகுதியில் நேற்றுமுன்தினம் இந்த சம்பவம் நடந்தது.
நல்லூரை சேர்ந்த 24 வயதுடைய யுவதியும், உடுவிலைச் சேர்ந்த வாலிபனும் கடந்த 3 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் அண்மையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, புங்குடுதீவிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தனிமையில் வசித்து வந்தனர்.
நேற்றுமுன்தினம் முகத்தை கறுப்புத்துணியால் கட்டிக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், காதலனை மண்வெட்டி பிடியால் தாக்கிவிட்டு காதலியை அள்ளிச் சென்றுள்ளனர்.
No comments
Post a Comment