Latest News

April 03, 2015

ஷேக்ஸ்பியர் கல்லறையை தோண்ட அழைப்பு
by admin - 0


உலகப்புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர், 1616–ம் ஆண்டு தனது 52–வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடல், ஸ்ட்ராட்போர்டு என்ற இடத்தில் உள்ள புனித டிரினிட்டி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையில், ஷேக்ஸ்பியரின் கல்லறையை தோண்டி, அவரது சிதைந்த உடல் பாகங்களை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஒரு கல்வியாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர், ஜோகனஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ரன்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பிரான்சிஸ் தாக்கரே ஆவார். சமீபத்தில், மன்னர் மூன்றாம் ரிச்சர்டின் கல்லறை தோண்டப்பட்டு, அவரது எலும்புகள் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டன.

அதே பாணியில், ஷேக்ஸ்பியரின் எலும்புகள் உள்ளிட்ட சிதைந்த உடல் பாகங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பிரான்சிஸ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம், ஷேக்ஸ்பியர் எப்படி வாழ்ந்தார், என்ன சாப்பிட்டார், என்ன குடித்தார், அவர் புகை பிடித்தாரா, அவர் எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரங்களை அறிய முடியும் என்று அவர் கூறியுள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்படுமா என்று தெரியவில்லை.
« PREV
NEXT »

No comments