Latest News

April 04, 2015

புலம்பெயர் தமிழர், அமைப்புகள் மீதான தடையை உடனடியாக நீக்க முடியாது! - அரசாங்கம் அறிவிப்பு
by admin - 0

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது என்றும், இதுபற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் "புலம்பெயர் அமைப்புகள் மீதும், தனிநபர்களுக்கு எதிராகவும் விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பில் பரீசிலிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, அத்தடை எப்போது நீக்கப்படும்'' என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேற்படி தடையை உடன் நீக்கிவிட முடியாது. அதுபற்றி ஆராயவேண்டும். தற்போது ஐரோப்பாவில் புலித்தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி எவரும் பெரிதாகப் பேசுவதில்லை என்றும் கூறினார்.

« PREV
NEXT »

No comments