Latest News

April 13, 2015

மைதானத்திற்கு சிங்கத்துடன் வந்த ரசிகரால் பரபரப்பு
by admin - 0

fan came with lion  to the stadium
பாலஸ்­தீ­னத்தில் கால்­பந்­தாட்ட ரசிகர் ஒருவர் சிங்­கக்­குட்­டி­யுடன் மைதா­னத்தில் போட்­டியை ரசித்­தது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அங்கு கால்­பந்­தாட்ட ரசி­கர்கள் அதிகம் என்­பதால், அடிக்­கடி கால்­பந்­தாட்ட விளை­யாட்டு போட்­டிகள் நடத்­தப்­படும். ஒவ்­வொரு முறையும் நிரம்பி வழியும் ரசி­கர்­களின் கூட்­டத்தால், ஆட்­டங்கள் களை­கட்டும்.

இந்­நி­லையில் சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-­ச­டாக்கா அணிக்கும் இடையே பர­ப­ரப்­பான போட்டி நடந்துக் கொண்­டி­ருந்­தது. இருப்­பினும் ரசி­கர்கள் கால்­பந்­தாட்ட விளை­யாட்­டினை ரசிக்­காமல், பார்­வை­யாளர் பகு­தியில் நின்று கொண்­டி­ருந்த சாத் அல்தீன் அல்-­ஜமால் என்ற ரசி­கரை வியப்­புடன் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தனர்.
fan came with lion  to the stadium

அதற்கு காரணம் அல்-­ஜமால் தனது கையில் சிங்­கக்­குட்­டியை வைத்­துக்­கொண்டு ஆட்­டத்தை ரசித்து கொண்­டி­ருந்தார். மேலும் அந்த சிங்­கக்­குட்­டிக்கு தனது விருப்­ப­மான கால்­பந்­தாட்ட அணியின் ஜெர்­ஸியை அணி­வித்­தி­ருந்தார். கால்­பந்­தாட்ட ரசி­க­ரான அல்-­ஜமால் தனது வீட்டில், அலெக்ஸ் மற்றும் மோனா என்ற இரண்டு சிங்­கக்­குட்­டி­களை வளர்த்து வரு­கிறார்.

தெற்கு காசாவில் உள்ள ரபா என்ற நகரில் வசித்­து­வரும் அல்-­ஜமால், அங்­கி­ருக்கும் வன­வி­லங்கு பூங்­கா­வி­லி­ருந்து இந்த இரு சிங்­கக்­குட்­டி­க­ளையும் தத்­தெ­டுத்து வளர்த்து வரு­கிறார்.
« PREV
NEXT »

No comments