Latest News

April 13, 2015

நம்பிக்கையில்லாத பிரித்தானிய மக்கள்
by admin - 0

பிரித்தானியாவில் சுமார் 50 சதவிகித மக்களுக்கு எந்த விதமான மதத்திலும் நம்பிக்கை இல்லை என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் மதங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள நாடுகள் குறித்து Win/Gallup International என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது.

அதில், பிரித்தானியாவில் சுமார் 50 சதவிகித மக்களுக்கு எந்த மதம் மீதும் நம்பிக்கை இல்லை என தெரியவந்துள்ளது. இவர்களில் 13 சதவிகிதத்தினர் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கின்றனர்.

சுமார் 30 சதவிகித மக்கள் மட்டுமே மத நம்பிக்கைகளுடன் இருக்கின்றனர். இவர்களில் எஞ்சிய சதவிகித மக்களுக்கு அவர்களின் நம்பிக்கைகள் குறித்து விவரிக்க தெரியவில்லை.

நம்பிக்கையில்லாத பிரித்தானிய மக்கள்
இதனடிப்படையில் மத நம்பிக்கையை பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா 6வது இடத்தை பிடித்துள்ளது.

உலக அளவில் சுமார் 65 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், தாய்லாந்து நாடு மதத்தை கட்டுப்பாடுடன் பின்பற்றுவதில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தாய்லாந்தில் சுமார் 94 சதவிகித மக்கள் மத நம்பிக்கை ஈடுபாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு அடுத்ததாக, அர்மேனியா மற்றும் மொராக்கோ நாடுகள் 93 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன.

எந்த மதத்தையும் பின்பற்றாமல் கடவுள் மறுப்பு கொள்கைகளை உடைய நாடுகளில் ஒன்றாக சீனா திகழ்கிறது. இங்கு, சுமார் 61 சதவிகித மக்களுக்கு எந்த மதம் மீதும் நம்பிக்கை இல்லை.

வெறும், 6 சதவிகித மக்களே ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றி வருகின்றனர்.

இதற்கு அடுத்ததாக, ஜப்பானில் 13 சதவிகித மக்களுக்கு மட்டுமே மதங்களின் மீது நம்பிக்கை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
« PREV
NEXT »

No comments