இரட்டை பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் தேர்தலில் போட்டியிடவோ, வாக்கு கோருவதற்கோ முடியாது என்ற சரத்து, நேற்று நிறைவேற்றப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை வரையறுக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஒருவரின் பதவிகாலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஒருவருக்கு கிடைத்திருந்த ராஜதந்திர சிறப்புரிமைகளும் 19 வது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், 18 வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ரத்து செய்யப்பட்ட 17 வது திருத்தமான சுயாதீன ஆணைக்குழு 19 வது திருத்தத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது
No comments
Post a Comment