தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர், சர்வதேச சமூகம், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் சதித் திட்டமே 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமும் 20வது அரசியலமைப்பு திருத்தச்சட்டமும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
19ம், 20ம் திருத்தச் சட்டங்கள் அவசர அவசரமாக கொண்டு வரப்படுவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உரிய முறையில் ஆராயாது இவ்வாறு திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் பற்றி அறிவுடையவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 வீதமானவர்களே என சுட்டிக்காட்டியுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் அரசியல் சாசன பேரவை மிகவும் வலுவானது எனவும், நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிறைவேற்று அதிகாரம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளது.
No comments
Post a Comment