உலகின் அதி வயது கூடிய பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்த, ஜப்பானைச் சேர்ந்த மிசாவோ ஒகாவா தனது 117 வயது வயதில் இன்று காலமானார்.
ஒசாகா நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்தே, உடல் நலக்குறைவினால் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
1898 மார்ச் மாதம் 05ஆம் திகதி பிறந்த இவர், 2013ஆம் ஆண்டில் மேற்படி கின்னஸ் சாதனையை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons