அதன் ஆரம்ப நிகழ்வாக அண்மையில் கொள்ளுபிட்டி இரவு களியாட்ட விடுத்திக்குச் சென்று 16 மது போத்தல்களை மீட்டு அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
இதற்கு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு உதவி பொலிஸ் அதிகாரி விஜேதுங்க மற்றும் பொலிஸ் பரிசோதகர் சந்தன ஆகியோர் சென்றிருந்ததுடன் களியாட்ட விடுத்திக்கு வழங்கப்பட்ட கால எல்லை முடிந்தும் மது விற்றதாகத் தெரிவித்து கைது செய்துள்ளனர்.
இந்த களியாட்ட விடுதி பிரபல கோடீஸ்வர வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கெரோக்கி வசந்தவிற்குச் சொந்தமானது. கடந்த அரசாங்க காலத்தில் பொலிஸாருக்கு கப்பம் கொடுத்து வந்த நிலையில் கப்பம் நிறுத்தப்பட்டுள்ளதால் சோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் பொலிஸாருக்கு மாத்திரமன்றி அரசியல்வாதிகளுக்கும் களியாட்ட விடுதியில் கப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இரவு களியாட்ட விடுதிகளில் இரவு 11 மணிவரை மது விநியோகிக்கலாம். ஆனால் கடந்த அரசாங்கத்தில் அரசியல்வாதிகளின் ஆதரவில் அதிகாலை 2 மணியளவில் மது விநியோகிக்கும் வகையில் கெரோக்கி வசந்த அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment