தற்போது காவற்துறை கைதில் தேசிய வைத்தியசாலை மேர்சன் வொட்ஸ் சொகுசு அறையில் விடுமுறை கழித்துவரும் பசில் ராஜபக்ஷ மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோருக்கு இடையில் 27ம் திகதி 5 மணித்தியாலங்களுக்கு மேல் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறையில் இருந்து சுகயீனம் என்று அறிவித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பசில் சொகுசாக இருந்து கொண்டு தன்னை சந்திக்க வரும் அரசியல்வாதிகளிடம் மணித்தியாலக் கணக்கில் தனது அரசியல் எதிர்காலம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சிக்கும் ஹெல உறுமய மறுமுனையில் மக்கள் கண்ணில் மண் தூவி விட்டு ராஜபக்ஷக்களுடன் உறவுகளை பேணி வருகின்றமை அவர்களது இரட்டை வேட நிலையை எடுத்துக் காட்டுகிறது
ரத்தின தேரருக்கு சுத்தமான நளை என்ற அமைப்பு இருப்பதால் அவரது அரசியல் செயற்பாடுகள் குறித்து தமக்கு கருத்து வெளியிட முடியாது என ஹெல உறுமய உயர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் ஒன்றுபட்ட சிங்களத்தின் நாடகங்கள் ?????
No comments
Post a Comment