Latest News

April 09, 2015

மகிந்தவை எதிர்த்து குருநாகலில் அவமானப்பட்ட சந்திரிக்கா
by admin - 0



முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநயாக்கவிற்கு குருணாகலில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்று குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.  இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சந்திரிக்காவிற்கு அங்கு கூடியிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடுமையான வார்த்தைகளினால் சந்திரிக்காவை குழுமியிருந்தவர்கள் திட்டியுள்ளனர். ஆரம்ப நிகழ்வில் குத்து விளக்கேற்றுவதற்காக சந்திரிக்கா சென்ற போது கூக்குரல் எழுப்பி அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. 

கூட்டம் நிறைவடைந்து வெளியேறிய போதும் சந்திரிக்காவிற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதேவேளை பிரதேச அரசியல்வாதிகள் கூடி சந்திரிக்காவை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

“எங்களது மெய்யான தலைவர் மஹிந்த ராஜபக்சவே, செல்லும் இடமெல்லாம் மஹிந்தவை விமர்சனம் செய்ய வேண்டாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க வேண்டாம். ஓய்வு பெற்றுக்கொண்டால் வீட்டுக்கு செல்ல வேண்டும்” என திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதற்கும் சந்திரிக்கா பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

« PREV
NEXT »

No comments