Latest News

April 25, 2015

மைத்திரி-மஹிந்த சந்திப்பு இரத்து
by admin - 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெறுவதற்கு திட்டமிட்டிருந்த பேச்சுவார்த்தை இரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேலைப்பளு காரணமாகவே இந்த சந்திப்பு இராஜினாமா செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்புக்கு நானே ஏற்பாட்டாளராக இருந்தேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறினே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை 25ஆம் திகதி இரவு 7 மணிக்கு சந்திப்பதற்கு  இணக்கம் தெரிவித்திருந்தார்.

 

 

எனினும், ராஜபக்ஷவின் வேலைப்பளு காரணமாக அவரால் சந்திக்க முடியாது என்றும் குமார் வெல்கம எம்.பி தெரிவித்தார்.(tm)

« PREV
NEXT »

No comments