Latest News

April 25, 2015

19ஆம் திருத்தச் சட்டம் சுயாதீன ஊடகங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்: கொமின் தயாசிறி
by admin - 0


19ஆம் திருத்தச் சட்டம் சுயாதீன ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். 

சுயாதீனமாக நேர்மையாக கருத்துக்களை வெளியிடும் தனியார் ஊடகங்களுக்கு 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடும். 

அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படக்கூடிய அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக சுமத்தக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் ஆபத்தானது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் அதிகாரிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது. 

நேர்மையாக செயற்படும் தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்களே இந்த புதிய முறைமையினால் பாதிக்கப்படுவர். 

எனவே இந்த புதிய உத்தேச சட்டம் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments