Latest News

April 06, 2015

காவத்தையில் பெண் சடலமாக….
by admin - 0

කොටකෙතන අතුරුදන් කතගේ මළ සිරුර ඇලක
காவத்தை, கொட்டகெத்தனவில் காணாமல் போன பெண்ணின் சடலம் கொட்டகெத்தனவில் உள்ள வாய்க்காலிலிருந்து சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது

ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையிலிருந்து காணாமல் போன சந்திராணி ஸ்வர்ணலதா (வயது 39) என்பவரின் சடலமோ இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அவரது வீட்டிலிருந்து சுமார் 500-600 மீற்றர் தூரத்திலிருக்கும் வாய்க்காலிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

கணவன் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பின் வீட்டுக்கு அருகில் மரண வீடொன்றுக்கு சென்றுள்ளார். கணவன் மீண்டும் இரவு 01 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.

மனைவி நித்திரை கொள்ளும் அறைக்கு சென்று பார்த்தபோது இரத்தம் சிந்திக்கிடந்ததோடு இறைச்சி துண்டுகளும், தலை சிதைந்த துண்டுகளும் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெண்ணை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில் வாவி ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கஹவத்தை கொட்டகெத்தன பகுதியில் இதுவரை 17 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 18வது பெண்ணும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளமை அப்பிரதேச மக்கள் இடையே கடும் அதிருப்தியை, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



« PREV
NEXT »