Latest News

April 17, 2015

இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது!
by Unknown - 0


இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

மன்னார் – பேசாலை பகுதியிலிருந்து 25 ஆயிரம் ரூபா கொடுத்து இவர்கள் படகு மூலம் தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல் முனைப் பகுதிக்கு இன்று அதிகாலை ஒரு மணியளவில் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஐந்து தமிழ் அகதிகளையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 1999 ஆம் ஆண்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த தாம் 2010 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பியதாக குறித்த இலங்கையர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஐவரையும் புழல் சிறையில் தடுத்து வைப்பதற்கு தமிழக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments