யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி பயணித்த கார் மாராவில கொடவில பிரதேசத்தில் விபத்தில் சிக்கி பலத்த சேதத்திற்கு உள்ளாகியதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பாராளுமன்ற உறுப்பினரின் காரும், கொழும்பிலிருந்து எதிரே வந்த டொல்பின் ரக வேனும் இவ்வாறு நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின்கம்பத்துடன் மோதியது.
இவ்விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறு காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களின் சாரதிகளும் மாரவில பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment