Latest News

April 02, 2015

ரெய்னாக்கு நாளை டும் டும் டும்!
by Unknown - 0


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. 28 வயதாரும் ரெய்னாவுக்கும் , அவரது தோழியான பிரியங்கா சவுத்ரிக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

ரெய்னா- பிரியங்கா சவுத்ரி திருமணம் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது.

இந்த திருமணத்தில் கிரிக்கெட் வீரர்களும், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். திருமணம் முடிந்த சில தினங்களிலேயே ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார்.

ரெய்னா திருமண செய்ய இருக்கும் பிரியங்கா சவுத்ரி தற்போது நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள் என்று குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »