இமயமலையில் அமைந்து உள்ள நேபாளம் நாட்டை கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு பூகம்பம் புரட்டிபோட்டு உள்ளது. பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்கு சிக்கி சுமார் 5000-த்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டு உருகுலைந்து உள்ளது. தொடர்ந்து அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட உலகநாடுகள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காட்மாண்டு நகரில் 4-வது நாளாக மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
காட்டுமாண்டு நகரில் 7 மாடி ஓட்டல் ஒன்றின் இடிபாடுகளை பிரான்ஸ் நாட்டின் மீட்பு குழுவினர் அகற்றிக் கொண்டிருந்தபோது நேபாள மொழியில் உதவி உதவி என்று ஒருவர் குரல் கொடுப்பது அவர்களுக்கு கேட்டது.
இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு குழுவினர் இயந்திரங்கள் உதவியுடன் அகலமாக துளையிட்டனர். பின்னர் அந்த துளை வழியாக பிராண வாயுவை அவருக்கு கிடைக்கச் செய்தனர். பல மணி நேரபோராட்டத்துக்கு பின்பு அவரைச் சுற்றியிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது அந்த இடத்தில் சிலர் பிணமாகவும் கிடந்தனர். அவர்களுக்கு இடையில் சிக்கி காயங்களுடன் உதவி கேட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை பிரான்ஸ் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவியும் அளித்தனர்.
அப்போது, மீட்கப்பட்டவரின் பெயர் ரிஷிகானல் (வயது 28) என்பது தெரிய வந்தது. 82 மணி நேரத்துக்கு பின்பு அவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். உயிர்பிழைத்தவர் அளித்த பேட்டியில், ஓட்டலில் 2-வது மாடியில் தங்கியிருந்தேன். திடீரென நில நடுக்கம் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழும் என்றோ, அதற்குள் சிக்கிக் கொள்வோம் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சில நொடிகளில் நடந்துவிட்டது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியபோது நாக்கு வறண்டு போனது. உதடுகளில் வெடிப்பு விழுந்தது. நகங்கள் எல்லாம் வெள்ளை நிறமாக மாறிவிட்டன.

No comments
Post a Comment