Latest News

April 27, 2015

மரண தண்டனை நிறைவேற்றப்பட 72 மணி நேரமே உள்ள நிலையில் குடும்பத்தினரை சந்தித்த மயூரன் சுகுமாறன்
by admin - 0

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்த மேலும் 8 பேரும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்களின் நாட்டு தூதரகங்களும் தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தன.

குறிப்பாக குற்றவாளிகள் ஆன்ட்ரூ சான், மயூரன் சுகுமாரனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு குரல் கொடுத்தது. அதை இந்தோனேசிய அரசு நிராகரித்தது. போதை பொருள் கடத்தலால் நாட்டில் குற்றங்கள் பெருகி நாட்டுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி ஜனாதிபதி ஜோகோ விடோடோ மறுத்துவிட்டார். அதை தொடர்ந்து 10 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் நுசாகம்பங்கள் தீவில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட உள்ளனர். தண்டனை நிறைவேற்ற அங்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு கைதிகள் என்பதால் அது குறித்த சம்மன் குற்றவாளிகளின் நாட்டு தூதர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான நோட்டீஸ் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மயூரனின் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார். இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்ற இன்னும் 72 நேரமே உள்ளதால், மயூரன் மற்றும் சான் ஆகியோர் தங்கள் குடும்பத்தினரை இன்று சந்தித்து பேசினர்.

எனினும் எப்படியாவது தூக்கு தண்டனையை நிறுத்தி விட வேண்டும் என்று ஆஸ்திரேலியா நினைக்கிறது. அதற்கேற்ப மரண தண்டனையை நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியாவுடன் இணைந்து உரிய தீர்வு காண வேண்டும் என்று இந்தோனேசியாவிடம் பிரான்சு வலியுறுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments