Latest News

April 02, 2015

மனைவியை அடித்த கணவருக்கு இரு வருட சிறைத்தண்டனை பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு
by admin - 0

சன­சந்­த­டி­மிக்க விற்­பனை நிலை­ய­மொன்றின் மின்­தூக்­கியில் தனது பிள்­ளைகள் மூவரின் முன்­னி­லையில் தனது மனை­வியை சுமார் 15 தட­வைகள் அடித்த கணவர் ஒரு­வ­ருக்கு இரு வருட சிறைத்­தண்­டனை விதித்து நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.
  பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

மேற்கு லண்­டனில் வெஸ்ட்பீல்ட் விற்­பனை நிலை­யத்­தி­லுள்ள மின்­தூக்­கியில் ஜேஸன் எட்வார்ட் (36 வயது) என்ற மேற்­படி நபர் தனது மனை­வியை அடிப்­பது, அந்த மின்­தூக்­கியில் பொருத்­தப்­பட்­டி­ருந்த 'சிசி­ரிவி' கண்­கா­ணிப்பு வீடியோ கரு­வியில் பதி­வா­கி­யுள்­ளது.

அவ­ரது இந்த நட­வ­டிக்­கையை மின்­தூக்­கியில் அவ­ருடன் இருந்த 13 வய­துக்கு குறைந்த வய­து­டைய அவ­ரது பிள்­ளைகள் அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்­துள்­ளனர்.

மின்­தூக்­கியின் கதவு திறக்­கப்­பட்­டதும் ஜேஸன் எட்­வார்ட்டை அந்த நிலை­யத்­தி­லி­ருந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தடுத்து நிறுத்தி விசா­ரிக்க முயற்­சித்­துள்­ளனர்.

எனினும் அவர் பொலிஸார் வரு­வ­தற்கு முன் தனது குடும்­பத்­தி­ன­ருடன் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் தீவிர விசா­ர­ணை­களை மேற்­கொண்ட அதி­கா­ரிகள், ஜேஸன் எட்­வார்ட்டை தேடிக் கண்­டு­பி­டித்து கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அவருக்கு இரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்க ப்பட்டுள்ளது.
« PREV
NEXT »