Latest News

April 12, 2015

ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்தவர்கள் தமிழகத்தர்கள்: ஆந்திராவில் 20 பேர்கொல்லப்பட்டமைக்கு கண்டனம்..!
by admin - 0

ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டும் போதெல்லாம் இதய சுத்தியோடு எமக்கு ஆதரவாக குரல்கொடுத்த உறவுகள் தமிழகத்தவர்களே.

  இன்று இவர்களுக்கு இன்னல்கள் இடமபெறுவது எம்மை வருத்தமடையச்செய்வதாக உள்ளது.
கண்மூடித்தனமாக இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் வைத்து 20 தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் வனப்பகுதியில் வைத்து ஆந்திரப்பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்து அவர் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டும் போதெல்லாம் இதய சுத்தியோடு எமக்கு ஆதரவாக குரல்கொடுத்த உறவுகள் தமிழகத்தவர்களே.  

இன்று இவர்களுக்கு இன்னல்கள் இடமபெறுவது எம்மை வருத்தமடையச்செய்வதாக உள்ளது.
தமிழர்களுக்கு எங்கும் அநீதிகளே இடம்பெற்றுவருகின்றது என்பது இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வெளிக்காட்டப்பட்டு வருகின்றது.
ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டிந்கும் இடையிலான முரண்பாடான விடயங்கள் இன்று அப்பாவித்தமிழர்களை கொல்வதற்கு ஒரு காரணியாகவும் மாறியுள்ளது.

இவ்வாறான கண்மூடித்தனமாக பொலிஸாரின் செயற்பாடுகள் இலங்கையில் மாத்திரமின்றி இந்தியாவிலும் அரங்கெறிவருவது கண்டனத்திற்கு உரியது என்பது மாத்திரமின்றி குறித்த பொலிஸாருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments