Latest News

April 21, 2015

நல்லாட்சி அரசாங்கமே! முதியவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய 14% வட்டி எங்கே?
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சமர்பித்த மினி வரவு செலவுத் திட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேல் வங்கியில் வைப்புச் செய்துள்ள முதியவர்களுக்கு 14% வட்டி வழங்கப்படும் என உறுதி அளித்தது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என முதியவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தேசிய அபிவிருத்தி வங்கியில் இது தொடர்பில் வினவிய முதியரிடம், வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதற்கு முன்பு வங்கியில் 10 லட்சம் வைப்பில் வைத்திருந்த முதியவர்களுக்கே இந்த வட்டி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முன் இருந்த வட்டிக்கு வங்கிக் கணக்கு தொடங்கவும் வங்கி ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பில் எமக்கு தகவல் வழங்கிய நபர், அவரிடம் இருந்த இடத்தை 17 லட்சம் ரூபாவிற்கு அடகு வைத்து அந்த பணத்தை 14% வட்டிக்கு வங்கியில் வைப்புச் செய்து ஓய்வு காலத்தை கடத்த எண்ணியிருந்ததாகவும் ஆனால் நல்லாட்சி அரசாங்கம் முதியவர்களை ஏமாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வரவு செலவுத் திட்டத்தில் வழங்கி வாக்கு சேகரிக்கும் முட்டாள்தன செயற்பாடு இதுவென அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதி அளித்த அடகு வைத்துள்ள தங்க நகைகளுக்கான வட்டி குறைப்பு திட்டமும் இன்னும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மக்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைத்திருக்கும். இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments