Latest News

April 21, 2015

இரவு முழுக்க பாராளுமன்றில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
by Unknown - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளமையை வாபஸ் பெறும் வரை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடந்து இடம்பெற்று வருகிறது.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை வாபஸ் பெறும் வரை பாராளுமன்றை விட்டு செல்லப்போவதில்லை எனவும் எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கப்படும் வரை பாராளுமன்றில் தங்கியிருக்க எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான இரவு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

சுமார் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், நாளை மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பிக்கும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ரோகித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.



« PREV
NEXT »

No comments