Latest News

March 17, 2015

சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சங்கக்காரா!
by Unknown - 0

இலங்கையின் குமார் சங்கக்கரா மீதுதான் அத்தனை பேரின் கண்களும் விழுந்து எழுந்து கொண்டுள்ளன. இந்தியாவின் பேட்டிங் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரை அவர் ஓவர் டேக் செய்வாரா என்ற எதிர்பார்ப்பால்தான் இந்த ஆர்வம். நாளை நடைபெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. சிட்னியில் இப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

அபாரமான பார்மில் தற்போது சங்கக்கரா உள்ளார். கடைசி போட்டிகளில் அவர் அடித்த அடி யாராலும் மறக்க முடியாதது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அவரது ஆட்டம் பிரமிக்க வைத்தது. இதுவரை நான்கு சதங்களை அவர் உலகக் கோப்பைப் போட்டியில் போட்டுள்ளார். நங்கூரம் போல இலங்கை அணியைக் காத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது புதிய சாதனை படைக்கும் ஒரு வாய்ப்பு சங்கக்கராவுக்கு வந்துள்ளது. 

உலகக் கோப்பைப் போட்டியில் அதிக அளவில் சதம் போட்ட சாதனை சச்சினிடம் உள்ளது. அதாவது 6 சதம் போட்டுள்ளார் சச்சின். சங்கக்கராவிடம் நான்கு சதம் உள்ளது. மொத்தமாக அவர் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் 5 சதங்கள் போட்டுள்ளார். இன்னும் ஒரு சதம் போட்டால் அவர் சச்சின் சாதனையை சமன் செய்யலாம். 

நாளைய காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறினால், அங்கும் சதம் போட்டால் அவர் புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது. 37 வயதான சங்கக்கரா தற்போது உள்ள பார்மைப் பார்த்தால், வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உண்டு என்றே தோன்றுகிறது. சச்சின் 1992ம் ஆண்டு முதல் 2011 வரை விளையாடி 6 சதங்களைப் போட்டுள்ளார். 

ஆனால் சங்கக்கராவோ 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் 4 சதம் போட்டுள்ளார். சங்கக்கராவை அடக்கி ஒடுக்க தனித் திட்டம் தீட்டி வருவதாக தென் ஆப்பிரிக் கேப்டன் ஏப் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். அதை மீறி பட்டையைக் கிளப்பும் பட்சத்தில் சங்கக்கராவுக்கு சச்சின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்புள்ளது. 

சச்சின் 44 இன்னிங்ஸ்கள் ஆடி 6 சதம் போட்டுள்ளார். 
சங்கக்கரா 34 இன்னிங்ஸ்கள் ஆடி 5 சதம் போட்டுள்ளார். 
ரிக்கி பான்டிங் 42 இன்னிங்ஸ் ஆடி 5 சதம் போட்டுள்ளார். 
ஏப் டிவி்லியர்ஸ் 21 இன்னிங்ஸ் ஆடி 4 சதம் போட்டுள்ளார். 
கங்குலி 21 இன்னிங்ஸ் ஆடி 4 சதம் போட்டுள்ளார். 
மார்க் வாக் 21 இன்னிங்ஸ் ஆடி 4 சதம் போட்டுள்ளார். 

இலங்கையின் திலகரத்னே, ஜெயவர்த்தனே ஆகியோரும் தலா 4 சதம் போட்டுள்ளனர்.

« PREV
NEXT »