தற்போது பேசப்படும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
360 நிகழ்ச்சியில் தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ரக்னா லங்கா நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவன்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையிலும் சட்டவிரோதமான செயல்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குற்றம்சுமத்தப்பட்டது போல் தமக்கும் பொதுபல சேனா அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறிய கோட்டாபய, தனக்கும் தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் மக்களுடன் முரண்பட எந்தவொரு காரணமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றால் தான் மின்சாரக் கதிரையில் அமர வேண்டி ஏற்படலாம் என்றும் அவர் இங்கு மேலும் கூறினார்.
No comments
Post a Comment