இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை செப்டெம்பருக்கு பின்னரும் காலம் தாமதிக்க கூடாது என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய ஐ.நா மனித உரிமை பிரதிநிதிகளினால் இலங்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இம்மாதம் அறிக்கை சமர்பிக்கப்படவிருந்தது.
எனினும் இலங்கை குறித்ததான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிப்பதற்கும், அது குறித்த விவாதத்தையும் ஒத்திவைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த பரிந்துரைக்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணை அறிக்கை வெளியிடுவதை செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரும் தாமதிக்க கூடாது எனும் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாட்டை பிரித்தானியா ஏற்றுக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Social Buttons