Latest News

March 18, 2015

மாடுகள் இறப்பு
by admin - 0

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த புகையிரதத்தில் மோதுண்டு ஆறு மாடுகள் இறந்துள்ளதுடன் ஐந்து மாடுகள் பலி காயமடைந்துள்ள சம்பவம் புதன்கிழமை அதிகாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குகநேசபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் இருந்து 07.15 மட்டக்களப்பு நோக்கி வந்த மீனகயாகடுகதி புகையிரதத்திலயே புனானை புகையிரத நிலையத்திற்கும் வாழைச்சேனை காகித நகர் புகையிரதத்திற்கும் இடையில் புதன்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் 310ம் மைல் கல்லுக்கு அருகில் இவ் விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை புகையிரத திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





« PREV
NEXT »