![]() |
விவசாயி |
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்லவன் வீட்டு சென்ற படைபுலனாய்வு படைகளால் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளார்கள் அது குறித்து அவர் தெரிவிக்கையில் " இன்று காலை எனது வீட்டுக்கு முன்பாக உள்ள வீட்டில் வந்து சிங்களப் படைப்புலனாய்வாளர்கள் என்னை விசாரித்துள்ளனர். நான் வீட்டில் இருந்தபோதும் வீட்டுக்கு வந்து என்னை எதுவும் விசாரிக்கவில்லை. ராஜபக்சவின் ஆட்சியக்காலத்தில் கடந்த செம்டம்பர் மாதத்திலும் இவ்வாறு சிங்களப் படைப் புலனாய்வாளர்கள் எங்கள் கிராமத் தலைவரிடம் வந்து விசாரித்திருந்தனர். நேரடியாக விசாரிக்காமல் இவ்வாறு மிரட்டும் ஒரு பாணி விளையாட்டு மைத்திரிபால சிறிசேன - ரணில் நல்லாட்சியிலும் தொடர்கிறது. நாட்டை விட்டு வெளியேறிய படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் மீண்டும் நாட்டுக்கு வரலாம் என்றும் அரசாங்கத்தை எவ்வாறும் விமர்சிக்கலாம் என்றும் கூறிக்கொண்டு நாட்டில் வாழ்பவர்களை அச்சுறுத்துகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்திலும் சிங்களப் பேரினவாத இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் கோத்தபாய காலத்தில் முன்னெடுக்கப்பட்டது போன்றே இனிதே முன்னெடுக்கப்படுகிறது. ஆள் மாறுகிறதே தவிர ஆட்சியில் மாற்றமில்லை. ஆட்சி மாறினாலும் ஈழ தமிழர்களை ஒடுக்கும் சிங்களப் பேரினவாத இராணுவ எந்திரத்தின் செயற்பாட்டில் மாற்றம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
Social Buttons