Latest News

March 31, 2015

பங்களாதேஷில் இணையத்தள எழுத்தாளர் படுகொலை
by admin - 0

இணையத்தள எழுத்தாளர்
பங்­க­ளா­தேஷின் தலை­நகர் டாக்­காவில் இணை­யத்­தள எழுத்­தாளர் ஒருவர் வெட்டுக் கத்­தியால் தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார்.

வஷிகுர் ரஹ்மான் என்ற மேற்­படி எழுத்­தாளர் டாக்­காவின் பெகன்­பரி பிர­தே­சத்­தி­லுள்ள அவ­ரது வீட்­டிற்கு அண்­மையில் வைத்து தாக்­கப்­பட்­டுள்ளார்.
இந்த படு­கொலை சம்­பவம் தொர்பில் இரு மதப் பாட­சாலை மாண­வர்­களை பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

இதற்கு ஒரு மாதத்­திற்கு முன் னர் அந்­நாட்டின் பிறி­தொரு முக்­கிய எழுத்­தா­ள­ரான அவிஜித் ரோ ய் வெட்டுக் கத்­தியால் தாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த சம்­ப­வத்தில் ரோயின் மனைவி காய­ம­டைந்­தி­ருந்தார்.
இத­னை­ய­டுத்து ரோயை படு­கொலை செய்யப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்த பராபி ஷபியுர் ரஹ்மான் என்ற அடிப்­ப­டை­வாத எழுத்­தா­ளரை பொலிஸார் கைது­செய்­தி­ருந்­தனர்.

பராபி ஷபியுர் ரஹ்மான் மத­வாத போராளி குழுவுடன் தொடர்பு கொண்ட ஒருவர் என குற்றஞ்சாட்டப்படுகிறது
« PREV
NEXT »