Latest News

March 06, 2015

நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரைக் காப்பாற்றிய பெண் மருத்துவர்
by Unknown - 0

தாய்லாந்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரின் உயிரை பெண் மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில்(Bangkok) உள்ள பல்கலைக்கழகத்தில் மித்ராகுவல்(Mitrakul Age-30) என்ற பெண், மருத்துவ விரிவுரையாளராய் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது,  சாலையில் வாலிபர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

லொறியில் மோதிய அந்த வாலிபர் தொண்டை மற்றும் பிறப்பகுதிகளில் படுகாயமடைந்து, இரத்த வெள்ளத்தில் துடித்துடித்து கொண்டிருந்தார்.

அப்போது காரை நிறுத்தி வேகமாக ஓடிவந்து முதல் உதவி செய்த மித்ராகுல், உடனடியாக அவசர ஊர்தியை அழைத்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த நபரின் காயங்களை மறைக்க தான் அணிந்திருந்த கோட்டையும்(Coat) கொடுத்து உதவியதுடன், அவசர ஊர்தி வந்தவுடன் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதன்பின் அந்நபருக்கு மற்ற மருத்துவர்களுடன் தீவிர சிகிச்சை அளித்த மித்ராகுவல், அவர் உடல் தேறி வீட்டிற்கு செல்லும் வரை அவருடனே இருந்துள்ளார்.

இவரது இந்த மனிதாபிமானமிக்க செயலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இவரை பாராட்டி பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மித்ராகுவல் கூறுகையில், அந்நபரை காப்பாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

நான் என் கடமையை தான் செய்தேன் என்றும் அவருக்கு உதவி தேவை என்ற நேரத்தில் அதிஷ்டவசமாக நான் அங்கு இருந்தேன் எனவும் கூறியுள்ளார்.





« PREV
NEXT »