Latest News

March 17, 2015

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான சிறிய கட்சிகள் கலந்துரையாடல்
by admin - 0

இலங்கை
 சிறிய கட்சிகள்
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்களில் தமிழ் தேசியகூட்டமைப்பு , ஈ.பி.டி.பி ,முஸ்லிம் காங்கிரஸ்  போன்றனவும் ஏனைய சிறிய கட்சிகளும் கலந்துகொண்ட 
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுகட்சிகள் பங்கெடுத்த விசேட கலந்துரையாடலொன்று  கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் நேற்றைய தினம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக சிறுகட்சிகளின் நிலைப்பாடுகள்இ எதிர்கொள்ளும் சவால்கள்இ தேர்தல் மாற்றம் தொடர்பில் சிறுகட்சிகள் எடுக்கக் கூடிய இறுதித்தீர்மானங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,EPDP சார்பில்   டக்ளஸ் தேவானந்தா ,முருகேசு சந்திரகுமார் ,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்,இராஜாங்க அமைச்சருமான ஹஸன் அலி  மாநகர முதல்வருமான நிஸாம் காரியப்பர், ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியூதீன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸநாயக்கஇ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் நவசமசமாசக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை

இதேவேளைஇ தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த கலந்துரையாடலொன்று நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகளை எதிர்வரும் ஒருவாரத்திற்குள் தமக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடமும் பணிப்புரை விடுத்தார்.

« PREV
NEXT »