Latest News

March 31, 2015

தேர்தல் முறைமை மாற்றம்- பேச்சுவார்த்தை தோல்வி
by Unknown - 0

vivasaayi

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எதுவுமின்றி நிறைவு பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கருத்து பரிமாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் உடனடியாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இந்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளதுடன், இதற்கு எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே தேர்தல் முறையில் மாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எதுவுமின்றி நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »