லிட்டில் மாஸ்டர் சச்சின் பல்வேறு சாதனைகளுக்கு பிறகு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு பின் அவரின் வாழ்க்கை வரலாறு 'Playing it my Way' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.
இப்போது அவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதை தன்னுடைய ரசிகர்கள்தான் கூறவேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
அதற்காக அவர் இப்போது ரசிகர்களின் கருத்துகளை கேட்க தொடங்கியுள்ளார்.இது குறித்து சச்சின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "விரைவில் என் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்பதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.", "இந்த படத்தில் உங்கள் அனைவரையும் ஈடுபடுத்த விரும்புகிறேன். படத்திற்கேற்ற தலைப்பை பரிந்துரை செய்யுங்கள்.
உங்களின் எண்ணங்களை தெரிவியுங்கள்.""படத்திற்கு பொருத்தமான தலைப்பை தெரிவிப்பவர்களுக்கு ஸ்பெஷலானது காத்திருக்கிறது. உங்களிடம் இருந்து தலைப்பை கேட்க காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சச்சின் ட்வீட் செய்துள்ளார்.
Social Buttons