Latest News

March 04, 2015

யார் உண்மையான போராளிகள்? முகவரியில்லாத முகநூலில்உலாவுபவர்களா?: -வல்வை அகலினியன்
by admin - 0


தங்களது தனிப்பட்ட காரணங்களால் தங்களுக்கு பிடிக்காதவர்களை… சரியான புரிதல் இல்லாமல்… தெளிவில்லாமல்… சரியான தேடலும் இல்லாமல்…மனதில் தீய எண்ணங்களையும், அழுக்குகளையும் தங்களுக்குள்ளே அடுக்கி வைத்துக் கொண்டு காழ்ப்புணர்ச்சி, குரோதம், குரூர குணம்

கொண்டு எந்தவித காரணமுமின்றி சிறுபிள்ளைத்தனமாக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு….

வேறு உணர்வாளர்கள் எழுதிய பதிவுகளை அப்படியே நகல் (Copy) எடுத்து தங்களது பாணியில் சில சில மாற்றங்கள் செய்து தங்களது போலி முகநூலில் பதிவு செய்து தங்களை ஒரு தமிழ் உணர்வாளர்களாகவும்… தங்களை ஒரு விடுதலைப் போராளிகளாகவும் வெளி வேடம் போட்டுக் காட்டிக் கொண்டு உலாவும் “காவாலிகளை” நம்பும் மூடர் கூட்டமானது…
போலிப் புலி உணர்வாளர்களால் வெளுத்ததெல்லாம் பால் எனக் கவரப்பட்டு உண்மையான உணர்வாளனை நசுக்கியே அவனின் உணர்வுகளையும் சாகடித்து விடுகிறார்கள்!!
சிலருக்கு…
இந்த முகநூல் இல்லையென்றால் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட அவர்களின் முகம் தெரியாது. அவர்கள் வசிக்கின்ற ஊருக்குக் கூட அவர்களைப் பற்றிய முகவரியும் தெரியாது. 
அவ்வாறு இருந்தபடி எந்த வேலைகளையும் செய்யாமல் வீட்டில் வெட்டியாக இருந்து கொண்டு இணையங்கள் ஊடாகவும் அடுத்தவர் முகநூல் ஊடாகவும் அவர்களின் பதிவுகளை திருடி எடுத்து சிறு மாற்றம் செய்து தங்கள் பாணியில் தாங்களே எழுதியது போல் பதிவிட்டு அடுத்தவர்களின் விருப்பத்தைக் கூட கேட்காமல் அவர்களின் முகநூல்களில் வலுக்கட்டாயமாக சொருகி (Tag) விட்டுத் தாங்களும் ஒரு உண்மையான போராளி என நரி வேசம் போடுகிறார்கள்.
இந்தப் போலியான நரிக்கூட்டங்களை நம்பி… அவர்கள் உதிக்கின்ற வார்த்தைகள் அனைத்தையும் தேவ வார்த்தைகளென நம்பி, இப்படியான நரிக்கூட்டங்களை தளபதி நிலையில் உயர்த்தி பார்க்கின்ற மகா கேவலத்தை எவ்வாறு சொல்வது?
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த எந்தவொரு புலி வீரனும் (சமர்க்களங்களிலும் இராணுவ கடமைகளிலும் சேவையாற்றுகிற போராளிகளைத் தவிர) தன்னைப் பற்றிய விபரங்களையும், தான் யார் என்பதையும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கே ஒரு போதும் சொன்னது கிடையாது!
அதிலும் முக்கியமாக புலனாய்வுப்பிரிவிலும், கரும்புலிகள் படையணியிலும் இருப்பவர்கள் வேறு படையணிப் போராளிகளுக்கு தம்மை ஒருபோதும் இனங் காட்டிக் கொண்டதும் கிடையாது!!
உண்மையான எந்தப் போராளியும் அதை விரும்புவதும் கிடையாது!
மற்றைய போராளிகளும் அதை அறிந்து கொள்ள ஒரு போதும் துடிப்பதும் கிடையாது!
தேசியத் தலைவனின் வளர்ப்பு அத்தகையது! 
அதனால்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டுக்கோப்புடன் வளர்ந்து மக்கள் மனதிலும் நீங்காத தனிப்பெரும் இடத்தினைப் பிடித்து உலகினில் உயர்ந்து தனக்கென்று ஒரு தனியான இடத்தை தக்க வைத்திருக்கிறது..
ஆனால், தற்போது போற போக்கைப் பார்த்தால் அந்த உயரிய இடத்தை தகர்த்து எறிந்து விடுவார்கள் போல… இந்த “முகநூல் போலிகள்”!!
வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த சிறு குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தளபதிகளையும் பார்த்து பேசி அருகினில் இருந்து உணவு கூட அருந்தி உள்ளார்கள்.. அதுமட்டுமல்லாமல் தாக்குதல் விமானங்களின் பெயர்களும், படகுகள், வாகனங்கள் மற்றும் கனரக ஆயுதங்கள் என அனைத்துப் பெயர்களையும் வரிசையாக ஒப்பிப்பார்கள்.
சாதாரண மக்களுக்கே அனைத்தும் தெரிகின்ற போது… எதுவும் அறியாத… திரைப்பட கதாநாயகர்களின் போலியான கூத்துக்களை நிஜம் என நம்பும் மூடர்கள் கூட்டமானது இந்த “முகநூல் போலிகள்” கூறும் விடுதலைப் புலிகள் பற்றிய கதைகளை நம்பி இந்தப் போலிகளுக்கு “தளபதி”, “மாவீரன்” மற்றும் உயர்ந்த பதவி நிலைகளைக் கொடுத்து வணங்கத் தொடங்குகிறார்கள்..!
இது இவ்வாறு இருக்க… 
பலர் முகநூல்களில் புலி வேசம் போட்டுத் திரிவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இந்தப் போலிகள் பதிவுகளோடு நின்று விடுவதில்லை…
“அடுத்த கட்ட போராட்டம் ஆரமபிக்கப் போறோம், ஆட்கள் தேவை, பணம் தேவை” என்றும் “தலைவர்தான் தங்களை ஆட்கள் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்”, “தலைவரோடு தொடர்பில் இருக்கிறோம்” என்றும் கூறி அடுத்த பெரிய மகா இடியைப் போட்டு விடுகிறார்கள்…
இதை நம்பி திரைப்படக் கதாநாயகர்களை உண்மையான தலைவனாக நம்பும் மூடர் கூட்டமானது, தங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு போராடப் போகிறோம் என தங்கள் வீட்டிற்கும் சொல்லிக் கொண்டு கிளம்புவதுதான் அடுத்த மகா பரிதாபம்!!!
உண்மையான ஒரு விடுதலை வீரன் “தன்னை இன்னார்” என தன்னைச் சார்ந்த போராளிகளுக்கும் தன் சொந்தங்களுக்கும் அடையாளப்படுத்திக் கொள்ளாத போது… எவ்வாறு முகவரி தெரிந்து கொள்ள முடியாத முகநூலில் தங்களை போராளி என அடையாளப்படுத்த முடியும்? அதை நம்புகின்ற கூட்டமும் படு முட்டாள்கள் கூட்டமே!!
ஒரு கொலைக்காரன், ஒரு கற்பழிப்புக்காரன், ஒரு கொள்ளைக்காரன், ஒரு உளவாளி, சிங்கள அடி வருடிகள், ஒட்டுக்குழுக்கள் மற்றும் பல தேசத் துரோகிகள் என பல கூட்டங்களும் ஒன்று சேர்ந்து கொண்டு… தமிழீழ தேசம் பற்றியும், விடுதலைப் போராட்டம் பற்றியும் மற்றும் விடுதலைப் புலிகள் பற்றியும் பதிவுகளை இட்டு தாம் மிகவும் யோக்கியமானவர்களாக காட்டிக் கொண்டு உண்மையான போராளிகளையும், தமிழ் உணர்வாளர்களையும் தங்களது நச்சு வலையில் சிக்க வைப்பதற்கே… என்பதை ஏன், எந்தவொரு தமிழரும் உணர்ந்தது கொள்வதில்லை??? 
இது இவ்வாறு இருக்க ஒரு சிலர் இதே போன்ற பல போராட்டப் பதிவுகளை தங்களது முகநூல்களில் பதிவு செய்து தனக்கென்று ஒரு சுய சிந்திக்கும் ஆற்றல் இல்லாத ஒரு மூடர் கூட்டத்தை முகநூலில் சேர்த்து வைத்துக் கொண்டு… 
தன் தனிப்பட்ட காரணங்களால் தனக்குப் பிடிக்காதவர்களையும், உண்மையான உணர்வாளர்களையும் தன் போலிப் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து பின்னூட்டம் இடும் மூடர்களோடு சேர்ந்து அந்த உணர்வாளனின் குரல் வளையினை நசுக்கி துரோகிப் பட்டம் கொடுத்து பதிவுகள் இடுவது மகா வேதனை!!
முகம் தெரியாத முகநூலில் எந்தவொரு உளவாளியும் இருக்கலாம் என்பதை அறியாதவன் உண்மையான போராளியே கிடையாது!!! தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத போராளியானவன் எவ்வாறு முகநூலில் உள்ளவர்களுக்கு தன்னை ஒரு போராளி என்றும், தளபதி என்றும் தன் புகைப்படங்களை அனுப்பியும்… தான் கரும்புலி என்றும், புலனாய்வுத்துறை என்றும் சொல்லிக் கொண்டும் திரிவான்??
இதை ஏன் யாரும் உணர்ந்து பார்ப்பதில்லை!!! – இன்னும் வரும்….

- வல்வை அகலினியன்


« PREV
NEXT »